சிறப்பு மருத்துவ முகாம்

சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-06-10 18:17 GMT

இளையான்குடி, 

இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சாவித்திரி முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் முனியாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழரசி எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு மருந்து பெட்டகம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். சிவகங்கை மாவட்ட துணை இயக்குனர் ராம் கணேஷ் திட்ட விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், ஒன்றிய கழக நிர்வாகிகள் கருணாகரன், மலைமேகு, தமிழரசன், கண்ணன், சுதர்சன், சரவணன் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் உள்பட 20 மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன், தாமோதரன் ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்