ராயக்கோட்டை அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

ராயக்கோட்டை அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.

Update: 2023-10-05 19:45 GMT

ராயக்கோட்டை

ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமையொட்டி வஜ்ஜரப்பள்ளம் கிராமத்திற்கு சென்று அங்கு உள்ள கோவில், ராயக்கோட்டை சிவன் கோவில், விஷ்ணு கோவில்களை மாணவிகள் சுத்தம் செய்தனர். மேலும் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினர். நாட்டு நலப்பணி திட்ட நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி சம்பத் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு, பெண்கல்வியின் அவசியம், பெண்கள் தற்காப்பு குறித்து விளக்கி கூறினர். நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பத்மாவதி, சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்