ஆலமரத்துப்பட்டியில்வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
பாப்பாரப்பட்டி:
பென்னாகரம் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் கலைஞர் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் ஜெயசந்திரபாபு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத்தலைவர் சபரிநாதன் முன்னிலை வகித்தார். ஜி.கே.மணி எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் டாக்டர்கள் சுபாஷினி, மஞ்சு பார்கவி, சங்கீதா ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் காது, மூக்கு, தொண்டை, தோல், கண், எலும்பு முறிவு, பல், சிறுநீர், வாய் புற்று உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை செய்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது. இதில் பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் கவிதா, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சிவம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.