தஞ்சையில் பணம் வசூலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒட்டகம் பறிமுதல்

தஞ்சையில் பொதுமக்களிடம் பணம் வசூலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒட்டகம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஒட்டகம் உடல்நலக்குறைவாக காணப்பட்டதால் ஒட்டகத்தை மிருகவதை தடுப்பு சங்கத்தில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

Update: 2023-03-12 18:45 GMT


தஞ்சையில் பொதுமக்களிடம் பணம் வசூலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒட்டகம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஒட்டகம் உடல்நலக்குறைவாக காணப்பட்டதால் ஒட்டகத்தை மிருகவதை தடுப்பு சங்கத்தில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

பொதுமக்களிடம் பணம் வசூல்

தஞ்சை புதிய வீட்டவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஒரு ஒட்டகத்தை காட்டி பொதுமக்களிடம் பணம் வசூலில் ஈடுபட்டார். தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு நடைபயணமாக கூட்டிச் சென்று, பொதுமக்களிடம் காட்டி அந்த ஒட்டகத்தின் மூலம் நிதி வசூல் செய்து வந்துள்ளார்.

ஆனால் அந்த ஒட்டகம் மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதனை பார்த்த புதிய வீட்டுவசதி வாரிய பொதுமக்கள் தஞ்சை மாவட்ட மிருகவதை தடுப்பு சங்கத்திடம் ஒட்டகத்தை பராமரிக்காமல், அதன் மூலம் நிதி திரட்டுவதாக தகவல் கொடுத்தனர்.

ஒட்டகம் பறிமுதல்

நடக்க முடியாமல், வயதாகியும், மெலிந்தும் காணப்பட்ட அந்த ஒட்டகத்தை, உடனடியாக அருகாணுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், பறிமுதல் செய்து, மிருகவதை தடுப்பு சங்க வளாகத்துக்கு அழைத்துச் சென்று, கால்நடை டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஒட்டகத்தின் உரிமையாளர் அப்போது குடிபோதையில் இருந்ததால், அவரை மிருகவதை தடுப்பு சங்கத்துக்கு வரும்படி கூறி சென்றனர். ஆனால் நேற்று மாலை வரை ஒட்டகத்தின் உரிமையாளர் வரவில்லை. இதையடுத்து மிருகவதை தடுப்பு சங்க வளாகத்தில் ஒட்டகம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்