பனிமயமாத ஆலய திருவிழாவுக்கு வந்தநரிக்குறவர் திடீர் சாவு
பனிமயமாத ஆலய திருவிழாவுக்கு வந்த நரிக்குறவர் திடீரென இறந்து போனார்.
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய விழாவுக்கு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து வந்த நரிக்குறவர் செல்லப்பா (வயது 80) என்பவர் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல இயலாமல் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மேயர் ஜெகன் பெரியசாமி, தனது சொந்த செலவில் ஆம்புலன்சு மூலம் முதியவரின் உடலை வள்ளியூர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தார். மேயரின் இந்த மனிதாபிமான செயலை நரிக்குறவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.