பாதாள சாக்கடை திட்டத்திற்கு அளவீடு செய்யும் பணி

கள்ளக்குறிச்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அளவீடு செய்யும் பணி தொடங்கியது.

Update: 2022-08-10 17:18 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அளவீடு செய்யும் பணி 10-வது வார்டு விநாயகா நகர் துருகம் மெயின்ரோட்டில் நடந்தது. இதற்கு நகர மன்ற தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கி அளவீடு செய்யும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்ததும், அதன் அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் நிதிஒதுக்கப்பட்டவுடன் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றார். அப்போது நகராட்சி ஆணையர் குமரன், பொறியாளர் முருகன், துணைத் தலைவர் ஷமிம்பானு அப்துல்ரசாக், நகர மன்ற உறுப்பினர்கள் பாத்திமா அபுபக்கர், தேவராஜ், முருகன், மீனாட்சி கேசவன், செல்வம், சத்யாகுட்டி, சங்கீதா ஜெயராமன், உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்