செயற்கை உபகரணங்கள் வழங்குவதற்காக அளவீடு செய்யும் முகாம்

செயற்கை உபகரணங்கள் வழங்குவதற்காக அளவீடு செய்யும் முகாம் நடைபெற்றது.

Update: 2023-07-12 18:31 GMT

முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்களை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து உதவி உபகரணங்களுக்கான அளவீடு செய்யும் முகாம் பெரம்பலூரில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமினை கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டார். முகாமிற்கு எண்டோ லைட் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் துறை சார்ந்த வல்லுனர் குழுவினர் வருகை தந்து கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு உதவி உபகரணங்களை வழங்க அளவீடு செய்தார்கள். முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், கலந்து கொண்ட 23 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களுக்கான அளவீடு எடுக்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் ஹிலாலுதீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்