கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-02-25 03:03 IST

அரியலூரில் அண்ணா சிலை அருகே தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர் தமிழ்வேல் கண்டனம் தெரிவித்து பேசினார். கட்டண சேனல்களில் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் திருஞானம் நன்றி கூறினார். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்