கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூரில் மாவட்ட தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொருளாளர்ஆர்.யோகானந்தன், வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஜி.கே.சுரேஷ், தலைமை வகித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை தலைவர்கள் ஏ.சாமுடி ஏ.பாலகிருஷ்ணன், எஸ்.சரவணமுத்து ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்தும், கட்டண உயர்வு பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது.
இதில் சக்திவேல், கென்னடி, மணிமாறன், சிவசங்கர், மற்றும் ஏராளமான கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.