கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி
கேபிள் டி.வி. சேனல்களின் கட்டண உயர்வை கட்டுப்படுத்தக்கோரி நேற்று ஊட்டியில் ஆபரேட்டர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நல சங்க மாநில துணை தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வில்லியம், செயலாளர் தாகீர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கேபிள் டி.வி. சேனல்களின் கட்டணத்தை உயர்த்தி கொள்ளலாம் என்று மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதை பயன்படுத்தி அந்த சேனல்களின் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இதனால் ஆபரேட்டர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். இதில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.