"சி.ஏ.ஏ. சட்டம் ஏற்கத்தக்கது அல்ல" - தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.;

Update:2024-03-11 23:34 IST

கோப்புப்படம்

சென்னை,

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டது. இந்தசூழலில் குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சி.ஏ.ஏ. சட்டம் ஏற்கத்தக்கது அல்ல என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.

தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்" என்று அதில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்