சி.ஏ. படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு: இதுவரை இல்லாத அளவில் தேர்ச்சி

பட்டய கணக்காளர் (Charted Accountant)படிப்புக்கான இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.

Update: 2024-07-11 06:57 GMT

சென்னை,

இந்திய பட்டய கணக்காளர் (Charted Accountant) இறுதித்தேர்வு கடந்த மே மாதம் 2 தொகுதிகளாக 2-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில் பட்டய கணக்காளர் படிப்புக்கான இறுதித்தேர்வு முடிவுகளை இந்திய பட்டயக் கணக்காளர்கள் அமைப்பு (ஐ.சி.ஏ.ஐ.) கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது.

இந்திய பட்டயக் கணக்காளர் படிப்புக்கான தேர்வில் இதுவரை இல்லாத அளவில் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டுகளில் 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை மட்டுமே தேர்ச்சிபெற்ற நிலையில் இந்த ஆண்டு அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில் முதல் தொகுதி தேர்வு எழுதிய 74 ஆயிரத்து 887 மாணவர்களில் 20 ஆயிரத்து 479 பேர் தேர்ச்சி பெற்றனர். இரண்டாவது தேர்வை எழுதிய 58 ஆயிரத்து 891 மாணவர்களில் 21 ஆயிரத்து 408 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதேபோல் சி.ஏ. குரூப் 1 இண்டர் தேர்வு எழுதிய 1 லட்சத்து 17 ஆயிரத்து 764 பேரில் 31 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சி.ஏ. குரூப் 2 இன்டர் தேர்வு எழுதிய 71 ஆயிரத்து 145 பேர் எழுதியநிலையில் 13 ஆயிரத்து எட்டு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை icaiexam.icai.org, icai.org, icai.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். 

Tags:    

மேலும் செய்திகள்