வாக்காளர் பட்டியல் தொடர்பாக சுவாராசியமான புகார்; தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியல் தொடர்பாக சுவாராசியமான புகார்; தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல்

Update: 2023-02-24 21:57 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான கே.சிவக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் கூறும்போது, தேர்தல் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் பல புகார்கள் சுவாராசியமாக இருந்தன. உதாரணமாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 20 ஆயிரம் பேரின் பெயர்கள் போலியாக சேர்க்கப்பட்டு உள்ளன என்று கூறியிருந்தார். அதை ஆய்வு செய்தபோது, எனது பெயர், எனது மனைவி, மகனின் பெயரும் குறிப்பிட்ட முகவரியில் இல்லை என்று அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட நான் ஓட்டு போட்டேன். மாநகராட்சி பணியாளர்கள் இதை சரிபார்த்து என்னிடம் கூறும்போதுதான் தெரியவந்தது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்