ஈரோடு கரட்டாங்காடு பகுதியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு கரட்டாங்காடு பகுதியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தீவிர வாக்கு சேகரிப்பு

Update: 2023-02-23 22:48 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து காங்கிரஸ் கட்சி மாநில பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ. நேற்று காலை வீரப்பம் பாளையம் கரட்டாங்காடு 19-வது வார்டு பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்று கை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் திருச்செல்வம், வட்டார தலைவர் மோகன் ராஜ், மண்டல தலைவர் சசிகுமார், சேவாதள பொதுச்செயலாளர் பேபி, நாங்குநேரி கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, வட்டார தலைவர்கள் கணேசன், வாகைதுரை, நிர்வாகிகள் சுந்தர், சின்ராஜ், நாகராஜ், செல்வம், முத்துசாமி, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்