பிரசாரத்தின்போது ஒரே இடத்தில் சந்தித்த அமைச்சர் பொன்முடி -முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பிரசாரத்தின்போது ஒரே இடத்தில் சந்தித்த அமைச்சர் பொன்முடி -முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

Update: 2023-02-23 22:10 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். இதற்கிடையில் ஈரோடு கள்ளுக்கடைமேடு ஆலமரத்து தெருவில் அமைச்சர் பொன்முடி பிரசாரத்தை முடித்துக்கொண்டு தனது வாகனத்தில் ஏறினார். அப்போது அங்கிருந்தவர்கள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இங்கு தான் உள்ளார் என்று கூறினார்கள். உடனே அமைச்சர் பொன்முடி காரில் இருந்து இறங்கி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இருந்த வீட்டிற்கு சென்றார்.

பின்னர் அமைச்சர் பொன்முடி அங்கிருந்தவர்களிடம் தங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது செல்லூர் ராஜூ, தன்னிடம் கேட்காதீர்கள். அவர்களிடம் கேளுங்கள் என்று சிரித்தபடி கூறினார். அப்போது பொன்முடியும் சிரித்தபடியே பதில் கூறினார். கடைசியில் அமைச்சர் பொன்முடி, அங்கிருந்தவர்களிடம் அவர் எனக்கு சொந்தக்காரர் தான் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்