ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தீவிர ஓட்டு வேட்டை

ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தீவிர ஓட்டு வேட்டை

Update: 2023-02-20 21:59 GMT

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் காமராஜும், வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவும், அ.தி.மு.க. அரசின் பல்வேறு சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர ஓட்டு் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதன்படி ஈரோடு தந்தை பெரியார் நகர், அன்னை சத்யா நகர், வி.ஜி.பி. நகர், லட்சுமி நகர், பழனியப்பா நகர், நத்தக்காடு, பழைய மாரியம்மன் குட்டை, வாணியம்மன் கோவில் வீதி, மீன் மார்க்கெட், புது மாரியம்மன் வாய்க்கால் வீதி, உப்பிலியார் வீதி, முனியப்பன் கோவில் வீதி, பவானி மெயின் ரோடு, வெள்ளியங்கிரி வீதி, பெருமாள் வீதி ஆகிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர் காமராஜ், வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு கட்சி நிர்வாகிகளுடன் வீதி, வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர். அப்போது முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர் காவிரி செல்வம், கவுன்சிலர் ஹேமலதா, காவிரி முருகன் உள்பட பலர் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்