கழிவுநீர் கலப்பதால் மாசடைந்து வரும் மூலவைகை ஆறு

கழிவுநீர் கலப்பதால் மூலவைகை ஆறு மாசடைந்து வருகிறது

Update: 2022-06-05 12:50 GMT

கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஒன்றியத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மூல வைகை ஆறு குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்கி வருகிறது.. இந்நிலையில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் ஆற்றில் வரும் நீர் மாசடைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மூல வைகை ஆறு வறண்ட நிலையில் காணப்படும். அப்போது கழிவுநீர், ஆற்றில் குளம் போல தேங்கி நிற்கும். பின்னர் மழை பெய்து நீர் வரத்து ஏற்படும் போது அதனுடன் கழிவு நீரும் சேர்ந்து உறை கிணறுகளில் தேங்கி விடுகிறது. இதனால் குடிநீர் மாசடைந்து அதனை குடிக்கும் பொதுமக்களுக்கு டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. எனவே ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். அல்லது ஆற்றங்கரை ஓரமாக பெரிய பள்ளங்கள் தோண்டி அதில் கழிவு நீரை தேக்கி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்