தலா ரூ.10 லட்சம் வழங்கி பிரச்சினையை பெரிதாக்காமல் அரசு மூடி மறைக்கிறது
சாராயம் குடித்து இறந்துவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கி பிரச்சினையை பெரிதாக்காமல் அரசு மூடி மறைக்கிறது என்று எச்.ராஜா கூறினார்.
ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசாத்துபுரம் சிவன்மலை அடிவாரத்தில் உள்ள முத்துமாரியம்மன்கோவில் ஊஞ்சல் சேவை உற்சவத்தை தொடங்கிவைக்க வருகை தந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மூடி மறைக்கிறது
காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் மேல்விஷாரம் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் கீ்ழ்விஷாரம் பகுதிக்கு வழங்கப்படவில்லை. அரசு உடனடியாக காவிரி கூட்டு குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டில் இந்துவிரோத ஆட்சி நடக்கறது. இந்து கோவில்களில் இந்துக்களுக்கு அதிகாரம் இல்லை. அதேநேரத்த்தில் இந்துகளிடம் சரியான விழிப்புணர்வு இல்லை.
கள்ளசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் தஞ்சாவூரில் அரசு விற்பனை செய்யும் டாஸ்மார்க் மது குடித்தும் 2 பேர் உயிரிந்துள்ளனர். சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதிவழங்கும் அரசு கள்ளசாராயம் குடித்து இறந்துவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கி அரசு பிரச்சினையை பெரிதாக்காமல் மூடி மறைக்கிறது.
வழக்குப்பதிவு
தஞ்சாவூர் டாஸ்மார்க் மதுகுடித்து இறந்த வழக்கில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றார்.
வித்யா பீடம் பாராதி முரளிதார சுவாமிகள், கோவில் அறங்காவலர் வி.கே.ஜெயராமன், பொருளாளர் இளஞ்செழியன், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.