33-வது நாளாக பாதிப்பு குறைவு; தமிழகத்தில் 166 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று புதிதாக 92 ஆண்கள், 74 பெண்கள் உள்பட மொத்தம் 166 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நேற்று புதிதாக 92 ஆண்கள், 74 பெண்கள் உள்பட மொத்தம் 166 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 42 பேர், செங்கல்பட்டில் 15 பேர் உள்பட 30 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் உள்ளது. தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.
மேலும், 12 வயதுக்குட்பட்ட 32 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 31 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 216 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 2 ஆயிரத்து 114 பேர் சிகிச்சையில் உள்ளனர்.