வத்தலக்குண்டுவில் இறைச்சிக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
வத்தலக்குண்டுவில் இறைச்சிக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
வத்தலக்குண்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 52). இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். முத்துப்பாண்டி அப்பகுதியில் உள்ள இறைச்சி கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.இந்தநிலையில் இறைச்சி கடை அருகில் உள்ள மரத்தில் முத்துப்பாண்டி நேற்று இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் முத்துப்பாண்டியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.