ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தை சுற்றி ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-02-09 19:00 GMT


தமிழக மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தை சுற்றிலும் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் '5 ஆண்டுகளாக வடமதுரையில் நிரந்தர சார்-பதிவாளரை நியமிக்காதது ஏன்?, மாவட்ட பதிவாளருக்கு தக்க சன்மானம் கொடுப்பவர்களே தற்காலிக சார்பதிவாளராக நியமிக்கப்படுவது ஏன்? மேனுவல் வில்லங்கங்கள் வருடக்கணக்கில் தயார் செய்யாமல் இருப்பது ஏன்? நூற்றுக்கணக்கான இன்டெக்ஸ் கரெக்சன்களை சரி செய்யாமல் இருப்பது ஏன்?' என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


---


Tags:    

மேலும் செய்திகள்