தேயிலை செடிகளுக்கு களைக்கொல்லி தெளிக்கும் பணி மும்முரம்
தேயிலை செடிகளுக்கு களைக்கொல்லி தெளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்தது. இதனால் தேயிலை செடிகளுக்கு நடுவே களைச்செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் மகசூல் பாதிக்கும். எனவே, தேயிலை மகசூலை அதிகரிக்கும் வகையில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தேயிலை செடிகளுக்கு ரவுண்டப், கிளைசல் மற்றும் கிரம்மசோன் களைக்கொல்லி மருந்துகளை தெளிப்பான்கள் மூலம் தெளிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து கொணவக்கரை விவசாயி ஒருவர் கூறும்போது, கிளைசல் களைக்கொல்லி மருந்து ஒரு லிட்டருக்கு ரூ.600 ஆகிறது. இதனை தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கர் தேயிலை தோட்டத்திற்கு தெளித்தால் களைச்செடிகளை கட்டுப்படுத்துவதுடன், தேயிலை மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.