கிறிஸ்துமஸ் குடில்கள், அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் கிறிஸ்துமஸ் குடில்கள், வண்ண வண்ண ஸ்டார்கள் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரமாக நடை பெற்று வருகிறது.

Update: 2022-11-26 18:45 GMT

கோவை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் கிறிஸ்துமஸ் குடில்கள், வண்ண வண்ண ஸ்டார்கள் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரமாக நடை பெற்று வருகிறது.

கிறிஸ்துமஸ்

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளை வண்ண வண்ண ஸ்டார்கள் மற்றும் அலங்கார பொருட்களால் அலங்கரிப்பார்கள்.மேலும் இயேசு கிறிஸ்து பிறந்ததை சித்தரிக்கும் வகையில் குடில்கள் அமைத்து அலங்காரம் செய்வார்கள். இந்த நிலையில் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதால் கோவையில் கிறிஸ்துமஸ் மரம், ஸ்டார்கள், குடில்கள் விற்பனை தொடங்கி உள்ளது.

அலங்கார பொருட்கள்

இதன்படி கோவையில் டவுன்ஹால் 5 முக்கு சாலை, காந்திபுரம் கிராஸ்கட் சாலை, பெரியக்கடை வீதி, ஒப்பணக்கார வீதி, மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் அலங்கார பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

இதற்காக புதிய மற்றும் பல்வேறு வண்ணங்களில் ஸ்டார்கள் மற்றும் கிறிஸ்து மஸ் தாத்தா பொம்மைகள், கிறிஸ்துமஸ் மரங்கள், மணிகள், அலங்கார பொருட்கள், குடில்களுக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

விற்பனை மும்முரம்

இதில், கண்கவர் வகையில் ஒளிரும் அலங்கார விளக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள், தொப்பிகள், கலைஞர்கள் வடிவமைத்த அழகிய வண்ண பொருட்களும் இடம்பெற்றுள்ளன.

டிசம்பர் மாதம் அடுத்த வாரம் தொடங்க உள்ளதால் கிறிஸ்தவர்கள் இப்போது இருந்தே கிறிஸ்துமஸ் குடில்கள், மரங்கள் மற்றும் வண்ண வண்ண ஸ்டார்கள் உள்ளிட்ட பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் கோவையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்