தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

உளுந்தூர்பேட்டையில் தொழில்அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துடது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

Update: 2023-06-09 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

தொழிலதிபர்

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்தவர் வீரமணி மகன் ஆறுமுகம்(வயது 37). இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சுடர்மணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. தற்போது ஆறுமுகம் அவரது மனைவி சுடர்மணியுடன் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேபி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இவர் பல ஆண்டுகளாக பங்குச் சந்தையில் முதலீடு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பிணமாக தொங்கினார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். பின்னர் நேற்று காலை படுக்கையில் இருந்து எழுந்த சுடர்மணி அவரது கணவர் ஆறுமுகத்தை காணாமல் தேடினார்.

அப்போது வீட்டின் குளியல் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கே 2 கைகளும் கட்டப்பட்டுள்ள நிலையில் ஆறுமுகம் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

பின்னர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை மீ்ட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆறுமுகத்தின் சாவுக்கான காரணம் தெரியவில்லை?

இது குறித்த புகாரின் பேரில் பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்