தூக்குப்போட்டு தொழிலதிபர் தற்கொலை

புதுப்பேட்டை அருகே தூக்குப்போட்டு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-02 18:53 GMT

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே பண்டரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 55). தொழிலதிபரான இவர் சமையல் எண்ணெய் ஆலை நடத்தி வந்தார். தேவராஜனுக்கு அடிக்கடி உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை எண்ணெய் ஆலை வளாகத்தில் உள்ள குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்