தூக்குப்போட்டு தொழிலதிபர் தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-18 19:14 GMT


விருதுநகர் முத்துராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் லூர்து சந்திரன் (வயது 49). இவர் அப்பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை நிலையம் வைத்திருந்தார். தொழிலுக்காக ரூ. 1.5 கோடி கடன் வாங்கிய நிலையில் தொழில் சரிவர நடக்காததால் கடனை திருப்பிச் செலுத்தமுடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் விற்பனை நிலையத்தில் உள்ள தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரது மனைவி மரிய சுகிர்தா கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்