தொழிலதிபரை மனைவியுடன் கடத்திய வழக்கு: உதவி போலீஸ் கமிஷனருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

தொழிலதிபரை மனைவியுடன் கடத்திய வழக்கு: உதவி போலீஸ் கமிஷனருக்கு நிபந்தனை முன் ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2022-06-30 18:50 GMT

சென்னை,

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது மனைவியை ஒரு கும்பல் பண்ணை வீட்டிற்கு கடத்திச் சென்று, அவர்களை கட்டிப்போட்டு போலீஸ் அதிகாரிகளின் துணையுடன் சொத்துக்களை எழுதி வாங்கியது.

இதுகுறித்து திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் சிவக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் சிக்கிய திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் சிவக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்ட்ர் பாண்டியராஜன், ஏட்டு, போலீஸ்காரர்கள் என்று மொத்தம் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தேடப்பட்ட உதவி கமிஷனர் சிவக்குமார் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து மீண்டும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சிவக்குமார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், மனுதாரருக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்