புதர் மண்டி கிடக்கும் பள்ளி வளாகம்

புதர் மண்டி கிடக்கும் பள்ளி வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-09-04 18:21 GMT


அரக்கோணம் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. சுற்றுச்சுவர் ஓரம் தேங்காய் மூடிகள் கிடக்கின்றன. அதில் மழைநீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. புதர்களில் இருந்து பூச்சிகள் வகுப்பறைக்குள் வர வாய்ப்புள்ளது. அதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துளளனர்.

Tags:    

மேலும் செய்திகள்