புதர் மண்டி கிடக்கும் வாய்க்கால்கள்

திட்டச்சேரியில் தண்ணீர் வருவதற்குள் புதர் மண்டி கிடைக்கும் வாய்க்கால்கள் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-13 18:45 GMT

திட்டச்சேரி:

திட்டச்சேரியில் தண்ணீர் வருவதற்குள் புதர் மண்டி கிடைக்கும் வாய்க்கால்கள் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதர்மண்டி கிடக்கும் வாய்க்கால்

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள வடக்கு புத்தாற்றில் இருந்து பிரிந்து செல்லும் பண்டாரவாடை பாசன வாய்க்கால் மூலமாக 470 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த பண்டாரவாடை பாசன வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் 2 பிரிவு வாய்க்கால்கள் 5 கிலோ மீட்டர் தொலைவு கொண்டவை.

இந்த வாய்க்கால்கள் மூலம் 200 ஏக்கர் நிலப்பரப்பு பாசனம் பெறுகிறது. இந்த நிலையில் இந்த 2 பிரிவு வாய்க்கால்களும் தூர்வாரப்படாமல் கருவேல மரங்கள், செடி, கொடிகள் படர்ந்து புதர் மண்டி உள்ளது. மேலும் பல இடங்களில் மணல் திட்டுகள் சேர்ந்து தூர்ந்து போய் உள்ளது. இதனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. நெற்பயிர்கள் நீரின்றி கருகி சேதம் அடைவதால், விவசாயிகளுக்கு போதிய மகசூல் இல்லாமல் பாதிப்படைகின்றனர்.

நடவடிக்கை

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை புதர் மண்டி கிடக்கும் வாய்க்கால்களை தூர்வார எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர்வதற்குள் இந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்