சாலையில் பஸ்களை நிறுத்தி டிரைவர், கண்டக்டர்கள் தகராறு

ஒரேநேரத்தில் பஸ்களை இயக்குவது தொடர்பாக 2 தனியார் பஸ்களின் டிரைவர், கண்டக்டர்கள் சாலையில் பஸ்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-05 20:00 GMT

செம்பட்டி வழியாக திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கும், மதுரையில் இருந்து பழனி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. இதுதவிர லாரி, சரக்கு வேன் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செம்பட்டி வழியாக செல்கின்றன. குறிப்பாக கொடைக்கானலுக்கு செம்பட்டி வழியாக வாகனங்கள் செல்கின்றன. இதனால் செம்பட்டி நகர் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்தநிலையில் நேற்று மாலை தேனியில் இருந்து பழனிக்கு செல்லும் தனியார் பஸ் செம்பட்டிக்கு வந்தது. அதேநேரத்தில் மதுரையில் இருந்து பழனிக்கு செல்லும் மற்றொரு தனியார் பஸ்சும் செம்பட்டிக்கு வந்தது. அப்போதுஒரேநேரத்தில் பஸ்களை இயக்குவது தொடர்பாக 2 தனியார் பஸ்களின் டிரைவர், கண்டக்டர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.மேலும் 2 பஸ்களையும் அதன் டிரைவர்கள் ஒரேநேரத்தில் செம்பட்டி பஸ் நிலையம் முன்பு திண்டுக்கல்-தேனி சாலையில் நிறுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது அங்கிருந்த வாகன ஓட்டிகள் சமரசம் செய்தனர். அதன்பிறகு ஒருவழியாக 2 பஸ்களும் அங்கிருந்து பழனி நோக்கி புறப்பட்டு சென்றன. இதையடுத்து போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் செம்பட்டியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்