ஆத்தூர் அருகேபஸ்-டிராக்டர் மோதல்; 9 பேர் காயம்ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-06-15 19:51 GMT

ஆத்தூர்

ஆத்தூர் அருகே பஸ்-டிராக்டர் மோதிய விபத்தில் 9 பேர் காயம் அடைந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டிராக்டர் மீது பஸ் மோதல்

சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்றது. இந்த பஸ்சை கள்ளக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் செந்தில் (வயது 44) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரத்தில் இருந்து ஆத்தூரை அடுத்த சொக்கநாதபுரத்திற்கு செங்கற்கள் பாரம் ஏற்றி ெகாண்டு ஒரு டிராக்டர் வந்தது. இந்த டிராக்டரை புதுப்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (44) என்பவர் ஓட்டி வந்தார்.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி அருகே டிராக்டர் மீது பஸ் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கி டிராக்டர் டிரைவர் ராமச்சந்திரன், புதுப்பாளையத்தைச் சேர்ந்த கஸ்தூரி (38), பழனிசாமி (44), மாயவன் (33) ஆகியோர் காயம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் பஸ்சில் வந்த சேலத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (40), ஆத்தூர் முல்லைவாடியைச் சேர்ந்த சுக்காயி (60), சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த லட்சுமணன் (40), சேலம் ராஜசேகர் (65), நரசிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (52) ஆகியோர் காயம் அடைந்தனர். இதையடுத்து காயம் அடைந்த 9 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து டிராக்டர் மற்றும் பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்