திருமங்கலம் அருகே பஸ் சேவை நிறுத்தம்; மாணவர்கள் அவதி

திருமங்கலம் அருகே பஸ் சேவை நிறுத்தத்தால் மாணவர்கள் அவதி அடைந்தனர்

Update: 2022-10-17 20:23 GMT

திருமங்கலம்,

மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து கல்லணைக்கு தினமும் 72டி பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் வில்லாபுரம், மண்டேலா நகர், வளையங்குளம், கூடக்கோவில் ஆகிய பகுதி வழியாக கல்லணைக்கு சென்று வந்தது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் சென்று வருவதற்கு வசதியாக இருந்தது. சில தினங்களாக இந்த பஸ்சை நிறுத்தியதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், 5 கி.மீ. தொலைவில் இருக்கும் பாரபத்தி மற்றும் கூடக்கோவில் கிராமத்திற்கு நடந்து செல்லும் நிலை உள்ளது. 2 ஆயிரம் பேர் வசிக்கும் கல்லணை கிராமத்திற்கு பஸ்சை நிறுத்தாமல் அனுப்பவேண்டும் என பொதுமக்கள் சார்பில் மதுரை மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்