குண்டடம் கிராம பகுதிகளுக்கு மீண்டும் பஸ்களைஇயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டடம் கிராம பகுதிகளுக்கு மீண்டும் பஸ்களைஇயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டடம்
குண்டடம் கிராம பகுதிகளுக்கு மீண்டும் பஸ்களைஇயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராமங்கள்
குண்டடம் மேற்கு பகுதியில் நந்தவனம்பாளையம், வெருவேடம்பாளையம், நாவிதன்புதூர், அய்யப்பநாயக்கன்பாளையம், காசிலிங்கம்பாளையம், நஞ்சப்பகவுண்டன்புதூர் உள்ளிட்ட ஏரளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குண்டடத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை, தோட்டக்கலை அலுவலகம், வருவாய்ஆய்வாளர் அலுவலகம் தாராபுரத்தில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், வட்டவழங்கல் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்டவற்றிற்கு செல்வதற்கு பெரும்பாலும் பஸ்களை நம்பியே உள்ளனர்.
பொதுமக்களின் வசதிக்காக திருப்பூரிலிருந்து ஜல்லிபட்டி, மேட்டுக்கடை, குண்டடம் வழியாக தாரபுரத்திற்கு ஒரு தனியார் பஸ்சும், தாராபுரத்தில் இருந்து குண்டடம், மேட்டுக்கடை வழியாக ஜல்லிபட்டிக்கு ஒரு அரசு டவுன் பஸ்சும் இயக்கப்பட்டு வந்தது. இதில் தனியார் பஸ் கடந்த சில ஆண்டுகளாகவே இயக்கப்படுவதில்லை. அரசு டவுன் பஸ்சும் ஒரு தடவை மட்டும் வெருவேடம்பாளையம் வரை இயக்கப்படுகிறது. மற்றொரு அரசு பஸ் தாராபுரத்திலிருந்து உப்பாறுஅணை, எரகாம்பட்டி, ஜல்லிபட்டி வழியாக காலை ஒரு டிரிப் மட்டும் திருப்பூருக்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ் மேட்டுக்கடை, குண்டடத்திற்கு செல்வதில்லை.
மேட்டுக்கடை, குண்டடம் பகுதிகளிலுள்ள அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல வேண்டுமெனில் ஜல்லிபட்டி சென்று அங்கிருந்து பஸ் பிடித்து பல்லடம் போய் பின்னர் மேட்டுக்கடை, குண்டடம் பகுதிகளுக்கு செல்கின்றனர்.
நடவடிக்கை
இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, எங்கள் பகுதிகளிலிருந்து அலுவல் பணிகளுக்காக குண்டடம், தாராபுரம் செல்லவும், பள்ளி கல்லூரி மாணவர்கள் குண்டடம், தாராபுரம் எளிதாக செல்லவும், குண்டடம், மேட்டுக்கடை பகுதி பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உடுமலைப்பேட்டைக்கு சென்று வரவும் வசதியாக உடுமலைப்பேட்டையிலிருந்து ஜல்லிபட்டி, மேட்டுக்கடை, குண்டடம் வழியாக அரசு பஸ் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.