ஒரகடம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து; 27 பேர் காயம்
ஒரகடம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் காயம் அடைந்தனர்.;
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் உள்ள தனியார் தொழிற்சாலை உள்ளது. நேற்று தொழிற்சாலையில் பணியில் இருந்த ஊழியர்கள் பணி முடிந்ததும் தொழிற்சாலையின் பஸ் மூலம் வீடுகளுக்கு புறப்பட்டனர். பஸ் காஞ்சீபுரம் நோக்கி வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் குண்ணவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி தலை கீழாக கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் இருந்த 23 பெண் ஊழியர்கள், 3 ஆண் ஊழியர்கள் மற்றும் டிரைவர் என மொத்தம் 27 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்து ஒரகடம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விபத்து நடந்த பகுதிக்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.