புஞ்சைபுளியம்பட்டி அருகே பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு

புஞ்சைபுளியம்பட்டி அருகே பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு

Update: 2023-10-01 20:19 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உயிலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் புஞ்சைபுளியம்பட்டி காந்தி நகர் தோட்ட சாலை பகுதியில் ஹேங்கர் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மகன் தீபக்குமார் (24). இவர் பி.காம் முடித்துவிட்டு தந்தைக்கு உதவியாக நிறுவனத்தை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை நிறுவனத்தில் இருந்து தீபக்குமார் மோட்டார்சைக்கிளில் புஞ்சைபுளியம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். காந்திநகர் அருகே வளைவில் திருப்பியபோது மோட்டார்சைக்கிளும், எதிரே புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து நம்பியூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தீபக்குமார் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அன்னூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு் தீபக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்