அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
தஞ்சையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.;
தஞ்சாவூர்;
தஞ்சை கரந்தை போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சம்பவத்தன்று காலையில் ஒரு அரசு பஸ் பழைய பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் வெள்ளைபிள்ளையார் கோவில் அருகே சென்ற போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் அந்த பஸ்சை மறித்து முன்பக்க கண்ணாடியை கற்கள் மற்றும் கம்பால் உடைத்தார். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் பஸ் டிரைவர் ஜான்ரத்தின சாமி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சை குறிச்சி தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.