பஸ்சை மறித்து டிரைவர் மீது தாக்குதல்

கடலூரில் பஸ்சை மறித்து டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசாா் வலைவீசி தேடிவருகின்றனா்.

Update: 2023-05-22 18:45 GMT

கடலூர்:

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மேல்பூவாணிக்குப்பத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 47). அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சை இயக்கிக்கொண்டு சிதம்பரம் நோக்கி புறப்பட்டார். பஸ்சில் பல்லவராயநத்தத்தை சேர்ந்த ராமலிங்கம் (53) என்பவர் கண்டக்டராக இருந்தார். கடலூர் மோகினி பாலம் அருகில் சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு பெண் உள்பட 3 பேர் திடீரென பஸ்சை வழிமறித்தனர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தியதும், அவர்கள் 3 பேரும் மோகன்குமாரை ஆபாசமாக திட்டி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த மோகன்குமார், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தாக்கியவர்கள் யார்?, எதற்காக அவர்கள் டிரைவரை தாக்கினார்கள்? என்பது குறித்து விசாரிப்பதுடன், 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்