பஸ் ேமாதி விவசாயி சாவு

கும்பகோணத்தில் பஸ் மோதி விவசாயி இறந்தார். இதனால் டிரைவரை கைது செய்யக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-01 20:27 GMT

கும்பகோணம்;

கும்பகோணத்தில் பஸ் மோதி விவசாயி இறந்தார். இதனால் டிரைவரை கைது செய்யக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விவசாயி

கும்பகோணம் அருகே உள்ள சோழங்கநத்தம் பகுதி சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60). விவசாயியான இவர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திாியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தனது பேரனை பார்க்க சைக்கிளில் வந்து விட்டு மீண்டும் சோழங்கநத்தத்தில் உள்ள தனது வீட்டுக்கு சைக்கிளில் திரும்பி சென்றார். சுவாமிமலை- திருவையாறு சாலையில் மூப்ப கோவில் சந்திப்பு பகுதியில் அவர் சென்ற போது பின்புறம் வந்த அரசு பஸ் பரமசிவம் சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் பரமசிவம் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேேய உயிரிழந்தார்.

சாலை மறியல்

இதைக்கண்ட அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பரமசிவத்தின் ஆதரவாளர்கள் சம்பவம் நடந்த இடத்தில் திரண்டு விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை உடனடியாக கைது செய்தால் மட்டுமே பரமசிவத்தின் உடலை அப்புறப்படுத்த அனுமதிப்போம் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.பஸ்சை கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜதுரை (59) ஓட்டி வந்தார். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அரசு பஸ் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்