ஆதிச்சனூர் கிராமத்துக்கு பஸ் வசதி
திருக்கோவிலூரில் இருந்து ஆதிச்சனூர் கிராமத்துக்கு பஸ் வசதி கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் அமைச்சர் நடவடிக்கை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அடுத்த முகையூர் ஊராட்சி ஒன்றியம் ஆதிச்சனூர் கிராமத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நேற்று முன்தினம் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் சார்பில் பல்வேறு மாணவர்கள் பயன் பெறும் வகையில் திருக்கோவிலூரில் இருந்து ஆதிச்சனூர் கிராமத்துக்கு அரசு பஸ் விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை கேட்டறிந்த அமைச்சர் பொன்முடி உடனடியாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி திருக்கோவிலூரில் இருந்து நேற்று ஆதிச்சனூர் கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. கிராமத்துக்கு வந்த அரசு பஸ்சை கிராமமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றதோடு, இதற்கு நடவடிக்கை எடுத்த அமைச்சர் பொன்முடிக்கும் நன்றி தெரிவித்தனர்.