விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி; சத்தி கோர்ட்டு உத்தரவு

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி; சத்தி கோர்ட்டு உத்தரவு

Update: 2022-07-08 21:17 GMT

சத்தியமங்கலம்

தேனி மாவட்டம் வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவா் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தனது காரில் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.

இந்த விபத்தில் அண்ணாதுரை பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அண்ணாதுரையின் மனைவி பாக்கியலட்சுமி, தாய் நாச்சியார், மகள்கள் ஆகியோர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அண்ணாதுரையின் குடும்பத்தினருக்கு ரூ.18 லட்சத்து 84 ஆயிரத்து 400-யை இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் 2 அரசு பஸ்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள் சத்தியமங்கலம் பஸ் நிலையத்துக்கு சென்று அங்கு நின்றிருந்த 2 அரசு பஸ்கள் மீது ஜப்தி நோட்டீஸ் ஒட்டி கோர்ட்டுக்கு கொண்டு சென்று நிறுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்