மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதல்; வாலிபர் சாவு

மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதல்; வாலிபர் சாவு

Update: 2022-07-09 20:07 GMT

திருவிடைமருதூர்:

திண்டுக்கல் மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த தனபால் மகன் சுரேந்திரன் (வயது29). இவர் குடவாசல் புளியந்தோப்பு ஆற்றங்கரை தெரு பகுதியில் வசித்து வந்தார். கூலித்தொழிலாளியான இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் நாச்சியார் கோவிலில் இருந்து நன்னிலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். செறுகுடி கிராமம் ஒத்த வீடு அருகே சென்ற போது நன்னிலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேந்திரன் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்