படகு, பரிசல், வலைகள் தீவைத்து எரிப்பு
மேல்மலையனூர் ஏரியில் படகு, பரிசல், வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டது.
மேல்மலையனூர்:
மேல்மலையனூர் பெரிய ஏரி, பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இருப்பினும் அங்காளம்மன் கோவில் தோன்றியதில் இருந்து இங்குள்ள 7 வம்சாவழி பூசாரிகள் ஏரியை பராமரித்தும், மீன்களை பிடித்தும் வந்தனர். மீன்களை பிடிப்பதற்காக சிறிய படகு, பரிசல் ஆகியவற்றை எரிக்கரையிலேயே நிறுத்தி வைத்திருப்பார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் படகு, பரிசல் மற்றும் வலைகளை தீவைத்து எரித்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இந்த செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என மேல்மலையனூர் பருவதராஜகுல மீனவ சமூகத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.