தீக்காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு

ஆம்பூர் அருகே தீக்காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2023-03-27 17:43 GMT

ஆம்பூரை அடுத்த வெங்கிலி கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த துக்க நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு மனைவி ராணி (வயது 72) என்பவர் சென்றார். அப்போது துக்க நிகழ்ச்சி நடந்த வீட்டுக்குள் இருந்த மெழுகுவர்த்தி தீ, ராணியின் சேலையில் பற்றிக்கொண்டது. உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் தீக்காயமடைந்த ராணியை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்