சனாதனம் பற்றி பேசிய தமிழக விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலையை சீவி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு என உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சாமியார் பிரமஹன்சா அறிவித்து உள்ளார். அவருக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்புலிகள் கட்சியினர் பிரமஹன்சா சாமியாரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்து தமிழ் புலிகள் கட்சியினரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் சேகுவேரா, மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்தி, மாநில செயலாளர் (ஊடகபிரிவு) செந்தமிழன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.