அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் உடல் அடக்கம்

அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் உடல் அடக்கம்

Update: 2022-05-26 16:17 GMT

முத்தூர்

முத்தூரில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் தங்கமணியம்மாள உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சரின் தாயார் மரணம்

தமிழக செய்தித்துறை அமைச்சரும், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதனின் தாயார் தங்கமணியம்மாள் (வயது 89) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து நேற்று காலை மறைந்த தங்கமணியம்மாளின் உடலுக்கு உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், தெற்கு மாநகர ெபாறுப்பாளர்டி.கே.டி.மு.நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மடத்துக்குளம் ஜெயராமகிருஷ்ணன், விடியல் சேகர், கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி, செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் வி.ப.ஜெயசீலன் மற்றும்தி.மு.க. முன்னாள் நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள் நேரில் வந்து தங்கமணியம்மாளின் உடலுக்கு மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும் இறுதிஅஞ்சலி செலுத்தினார்கள்.

இறுதி சடங்கு

இதனை தொடர்ந்து நேற்று மதியம் 12 மணிக்கு தங்கமணியம்மாளின் உடலுக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

பின்னர் தங்கமணியம்மாளின் இறுதி ஊர்வலம் நடைபெற்று அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் இல்ல தோட்டத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்