வீடுபுகுந்து திருடியவாலிபருக்கு சிறைதண்டனை

மெஞ்ஞானபுரம் அருகே வீடுபுகுந்து திருடிய வாலிபருக்கு கோர்ட்டில் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-06-04 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரி மங்கலத்தை சேர்ந்்த சின்னத்துரை மகன் கொடிமலர(வயது35)். இவர் 21-ம் ஆண்டு சம்பவத்தன்று தாய்விளை கிராமத்தில் உள்ள தேன்மொழி என்பவரது வீட்டில் பீரோவை உடைத்து 6¾ பவுன் நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கலையரசி ரீனா நேற்று அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்