கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-15 18:45 GMT

கள்ளக்குறிச்சி அருகே பழைய மோகூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து இவருடைய மகள் தேவி(வயது 20). இவர் கடந்த 13-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது அக்காள் வீடான தேவபாண்டலத்துக்கு சென்று விட்டார். பின்னர் அவர் நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை காணவில்லை. தேவி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்