3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

வேதாரண்யம் அருகே 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2022-12-27 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளத்தில் செல்போன் கடைகள் வைத்து இருப்பவர்கள் வேம்பையன் (வயது 54), ரவி (40), அதே பகுதியில் மளிகை கடை வைத்திருப்பவர் இளையராஜா (35),இவர்கள் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்து கடைகளை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர். பின்னர் நேற்று காலை வந்த போது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உள்ளே சென்ற பார்த்த போது 2 செல்போன் கடைகளிலும் ஒரு மடிக்கணினி, 7 செல்போன்களும், மளிகை கடையில் ரூ.1,000 மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவசி தேடி வருகின்றனர். கடைகளில் மர்ம நபர்கள் திருடும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்