நகை பட்டறையில் மேற்கூரையை உடைத்து திருட்டு

தாடிக்கொம்புவில் நகை பட்டறையில் மேற்கூரையை உடைத்து வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.;

Update:2023-01-21 00:30 IST

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரத்தை சேர்ந்தவர் பாலன் (வயது 47). நகை தொழிலாளியான இவர், தாடிக்கொம்பு பகவதி அம்மன் கோவில் அருகே பட்டறை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பட்டறையை பூட்டிவிட்டு பாலன் தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை பாலன் தனது பட்டறையை திறந்து பார்த்தார். அப்போது பட்டறையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பட்டறையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்ததுடன், பட்டறையில் வைக்கப்பட்டிருந்த 200 கிராம் வெள்ளிப்பொருட்கள் திருடுபோயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலன், இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மர்மநபர்கள் 2 பேர் பட்டறையில் இருந்து வெள்ளிப்பொருட்களை திருடி சென்றது, பட்டறைக்குள் செல்வதற்கு முன்பு தெருவிளக்கு மின் இணைப்பை துண்டித்தது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் வெள்ளிப்பொருட்களை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்