வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-02-16 09:16 GMT

ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை விவசாய தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 48). இவரது மகள் சோனியா. இவர்கள் 2 பேர் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். தந்தை, மகள் 2 பேரும் நூம்பல் பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை இவர்கள் வேலைக்கு சென்றனர். பின்னர் அன்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் நகை, கால் கிலோ வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்